Home முக்கியச் செய்திகள் யாழில் வெடி குண்டுகள் மீட்பு !

யாழில் வெடி குண்டுகள் மீட்பு !

0

யாழ்ப்பாணம் (Jaffna) – கீரிமலை (Keerimalai) பகுதியில் வைத்து வெடி பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

குறித்த வெடி பொருட்கள் நேற்றைய தினம் (11.04.2025) மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நாராயணன் சுவாமி கோவிலுக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றினை சுத்தம் செய்தபோதே இவ்வாறு குண்டுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் காங்கேசன்துறை காவல்துறையினருக்கு குறித்த விடயத்தை தெரியப்படுத்திய நிலையில் ஆர்.பி.ஜி குண்டு மற்றும் 81 mm குண்டுகள் மீட்கப்பட்டன.

மேலும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

செய்திகள் :  கஜிந்தன் 

NO COMMENTS

Exit mobile version