Home இலங்கை சமூகம் ஜப்பானில் வெளிநாட்டு பெண் மர்ம மரணம்: இலங்கையர் அதிரடி கைது!

ஜப்பானில் வெளிநாட்டு பெண் மர்ம மரணம்: இலங்கையர் அதிரடி கைது!

0

ஜப்பான் – டோக்கியோவின் முக்கிய சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள நரிட்டாவில் உள்ள ஒரு வாடகை குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் புகையை சுவாசித்து 30 வயதான பிரேசிலிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதனை தொடர்ந்து, சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியதாகக் கூறப்படும் வேலையில்லாத இலங்கையர் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது நடவடிக்கை

குறித்த பெண் தங்கியிருந்த குடியிருப்பு பகுதிக்கு தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்று நாட்களுக்குப் பிறகு 31 வயதான அபசெலிய உதயங்க என்பவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தீயை அணைக்க முயற்சிக்காமல் சம்பந்தப்பட்ட குடியிருப்பில் அவசரமாக வெளியெறியமையால் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொலையா என விசாரணை

சம்பவ இடத்தில் இருந்து உயிரிழந்த பெண்ணின் தொலைபேசி, நகைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் உட்பட பல தனிப்பட்ட பொருட்களும் காணாமல் போயுள்ளதால் இது ஒரு கொலையாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணுடனான சந்தேகநபரின் தொடர்பு குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version