Home இலங்கை சமூகம் இலஞ்சம் மற்றும் ​மோசடி தடுப்பு ஆணைக்குழுவை விமர்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இலஞ்சம் மற்றும் ​மோசடி தடுப்பு ஆணைக்குழுவை விமர்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

0

இலஞ்சம் மற்றும் ​மோசடி தடுப்பு ஆணைக்குழுவை விமர்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் ஆணையாளர் நாயகம் ரங்க திசாநாயக்க எச்சரித்துள்ளார்.

2023 ஆண்டின் 09ம் இலக்க மோசடி தடுப்பு சட்டத்தின் பிரகாரம் இலஞ்சம் மற்றும் ​மோசடி தடுப்பு ஆணைக்குழுவுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 விமர்சிக்கும் அரசியல்வாதிகள்

அதன் பிரகாரம் ஆணைக்குழுவை விமர்சிப்பவர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

அந்த வகையில் அண்மைக்காலமாக இலஞ்சம் மற்றும் ​மோசடி தடுப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை அரசியல் பழிவாங்கல் என்று விமர்சிக்கும் அரசியல்வாதிகள் குறித்து தீவிரமாக அவதானித்து வருகின்றோம்.

அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் ஆலோசித்து வருகின்றோம்.

எனவே இலஞ்சம் மற்றும் ​மோசடி தடுப்பு ஆணைக்குழுவை விமர்சிப்பவர்கள் முதலில் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பில் தெளிவு பெற்றுக் கொள்வது சிறந்தது என்றும் ஆணையாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version