Home முக்கியச் செய்திகள் குலை நடுக்கத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள் : நாடாளுமன்றுக்கே வந்த இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்

குலை நடுக்கத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள் : நாடாளுமன்றுக்கே வந்த இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்

0

இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் பல விசாரணைக் குழுக்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து, கடந்த காலங்களில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான 20க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் பெற்ற கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைய விசாரணைக் குழுக்கள் இந்தத் தகவல்களைப் பெற நாடாளுமன்ற பதிவு அலுவலகம் மற்றும் நாடாளுமன்ற சேவைகள் பணியகத்தின் உதவியையும் நாடியுள்ளன.

விசாரணையின் நோக்கம் 

 மேலும் இந்த விசாரணையின் நோக்கம் முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் வசம் உள்ள சொத்துக்களை சரிபார்ப்பதாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றம் கூட்டத்தொடர்இல்லாத நாட்களில் இலஞ்ச ஒழிப்பு ஆணைய விசாரணைக் குழுக்கள் தகவல்களைச் சேகரிக்கின்றன.

 

NO COMMENTS

Exit mobile version