Home இந்தியா குங்குமம் வைக்கும்போது கைநடுங்கிய மணமகன்: திருமணத்தையே நிறுத்திய மணமகள் : இந்தியாவில் சுவாரஸ்யம்

குங்குமம் வைக்கும்போது கைநடுங்கிய மணமகன்: திருமணத்தையே நிறுத்திய மணமகள் : இந்தியாவில் சுவாரஸ்யம்

0

தனது நெற்றியில் மணமகன் குங்குமம் வைக்கும் போது அவரது கை நடுங்கியதால் அந்த திருமணமே வேண்டாமென மணமகள் விடாப்பிடியாக நின்று திருமணத்தை இரத்து செய்துள்ள சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

 இந்த சம்பவம் இந்தியாவின்(india) பீகார் மாநிலத்தின் கைமூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரிவருவதாவது,

மணமகளுக்கு குங்குமம் வைக்கும் நிகழ்வு

திருமண நிகழ்வு நடைபெற்று இறுதியில் மணமகளுக்கு குங்குமம் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. மணமகன் மகளின் நெற்றியில் குங்குமம் வைக்குமபோது அவரது கை நடுங்கியுள்ளது.

 உடனடியாக பொங்கியெழுந்த மணமகள் தனக்கு திருமணம் வேண்டாம் என அங்கு தெரிவித்துள்ளார்.இதற்காக அவர் தெரிவித்த காரணம் தான் சுவாரஸ்யமானது.

மணமகளின் குற்றச்சாட்டு

அதாவது, மாப்பிள்ளைக்கு குறை உள்ளது எனவும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் கை நடுங்குவதாகவும் மணப்பெண் தெரிவித்துள்ளார்.

 இருவீட்டாரும் கலந்து பேசியும் இணக்கம் காணப்படாததால் காவல்நிலையத்திற்கு விவகாரம் சென்றது.அவர்களும் இது தொடர்பில் மணமகளுடன் எவ்வளவோ பேசியும் பலன் கிடைக்கவில்லை.மணமகள் விடாப்பிடியாகவே நின்றுள்ளார். இறுதியில், மணமகன் மணமகள் இல்லாமல் வீடு திரும்பினார்.

 

NO COMMENTS

Exit mobile version