Home இலங்கை குற்றம் பிரித்தானியாவுக்கு அனுப்புவதாக யாழில் நடந்த பாரிய மோசடி அம்பலம்

பிரித்தானியாவுக்கு அனுப்புவதாக யாழில் நடந்த பாரிய மோசடி அம்பலம்

0

பிரித்தானியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நபர் ஒருவரிடம் 30 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் தாளையடியை சேர்ந்த 48 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

பாரிய மோசடி அம்பலம்

பிரித்தானியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி 30,691,444 ரூபாய் கையொப்பமிட்டு வங்கிக் கணக்கில் வைப்பு செய்து மோசடி செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளில் குடியேற்ற சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பெருந்தொகை பணத்தை செலவு செய்து அங்கு சென்ற பலர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரியாமல் தவித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் வெளிநாட்டு ஆசை காரணமாக பெருந்தொகை பணத்தை கொடுத்து ஏமாறும் சம்பங்களும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


NO COMMENTS

Exit mobile version