Home உலகம் நடுவானில் பறக்கும் போது விமானத்தில் வெளியான புகை : மூச்சுத்திணறலுக்கு உள்ளான பயணிகள்

நடுவானில் பறக்கும் போது விமானத்தில் வெளியான புகை : மூச்சுத்திணறலுக்கு உள்ளான பயணிகள்

0

துருக்கியின் (Turkey) இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்தின் (England) தலைநகர் லண்டனுக்கு சென்ற விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விமானத்தில், திடீரென வெளியான புகை காரணமாக 4 பேருக்கு மூச்சித் திணறல் ஏற்பட்டதனால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான குறித்த விமானம் 142 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தரையிறக்கப்பட்ட விமானம் 

இதனையடுத்து ருமேனியா தலைநகர் புக்காரெஸ்ட் விமான நிலையத்தில் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த நிலையில் விமானம் தரையிறங்கியதும் அங்கு தயாராக இருந்த மீட்புக்குழுவினர் பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றிய பின் மூச்சுத் திணறல் ஏற்பட்ட பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.

அத்துடன் குறித்து விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகனை அந்த நாட்டு விமான போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version