தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை மாற்றம் தொடர்பான வர்த்தமானி நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி
ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ்.குமாநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில், திருத்தம் செய்யப்பட்ட அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், பதவி நிலைகள் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கடந்த 10ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை திருத்தத்தின் படி மூன்று அமைச்சர்கள் மற்றும் 10 பிரதி அமைச்சர்களுக்கான பதவிகள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
