Home இலங்கை பொருளாதாரம் இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை குறித்து எச்சரிக்கை

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை குறித்து எச்சரிக்கை

0

இலங்கையில் மீண்டும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படக் கூடிய அபாயங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் எதிர்நோக்கிய மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மெதுவாக மீண்டு வரும் இலங்கை பொருளாதாரம் தற்போது ஸ்திர நிலையை அடைந்து வருவதாகக் கூறப்படுகின்றது.

எனினும், இதேபோன்ற நெருக்கடி மீண்டும் உருவாகும் அபாயம் கணிசமாக உள்ளதாக சுயாதீன ஆய்வுக் குழுவொன்றின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மாற்றத்திற்குட்பட்ட பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்தல் 2025–2030” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, தற்போதைய மத்திய வங்கியின் துணை ஆளுநர் டாக்டர் சந்திரநாத் அமரசேகர, முன்னாள் மூத்த துணை ஆளுநர் இவெட் பெர்னாண்டோ மற்றும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சிறிமல் அபேரத்ன உள்ளிட்டோர் இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர்.

அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 25% பேர் வறுமைக் கோட்டுக்குள் உள்ளனர் — இது 2021 ஆம் ஆண்டின் விகிதத்தை விட இரட்டிப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியின் போது வறுமை குறைப்பில் எட்டிய சாதனைகள் மீண்டும் பின்னடைந்து விட்டன என்றும், இலங்கை 2000களின் தொடக்கத்தில் காணப்பட்ட வறுமை நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை மேலும், இன்னொரு கடுமையான கடன் மறுசீரமைப்பு நெருக்கடியையும், உயரும் வறுமை நிலையும் தவிர்க்க விரைவான மற்றும் மூலோபாய பொருளாதார சீர்திருத்தங்கள் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலக பொருளாதார மந்தநிலை மற்றும் வர்த்தக பதற்றங்கள் அதிகரிக்கும் சூழலில், கடன் அழுத்தத்தால் பாதிக்கப்படும் இலங்கை பொருளாதாரம் மீண்டும் ஆபத்துக்குள்ளாகும் வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியம் (IMF) பொருளாதார வளர்ச்சி சுமார் 3% ஆக இருக்கலாம் என மதிப்பிடுகிறது. ஆனால், தேவையான சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படாவிட்டால் வளர்ச்சி வீதம் இதைவிடக் குறையக்கூடும் எனவும், ஏற்கனவே உயர்ந்துள்ள வறுமை நிலைகள் மேலும் மோசமடையக்கூடும் எனவும் அறிக்கை எச்சரிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version