தருமபுரம், புன்னை நீராவி பகுதியில் இருந்து முல்லைத்தீவு
பகுதிக்கு மோட்டார்சைக்கிளில் கசிப்பை கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நேற்று மாலை 110 லீட்டர் கசிப்புடன்
புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறப்பு நடவடிக்கை
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய புதுக்குடியிருப்பு
பொலிஸார் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போதே விற்பனைக்கு தயாராக இருந்த 110 லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
இந்த நிலையில் சந்தேகநபர்களையும், சான்று பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட
நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில்
புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
மேலதிக தகவல் – ஷான்
