Home இலங்கை சமூகம் யாழில் முதியவர் மீது கொடூர தாக்குதல்:சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

யாழில் முதியவர் மீது கொடூர தாக்குதல்:சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

0

யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள
கள்ளுத்தவறணை ஒன்றில் முதியவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறித்த
முதியவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவமானது நேற்றையதினம்(19) இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த முதியவர் நேற்றையதினம் தவறணைக்கு செற்றுள்ளார். இதன்போது அங்கிருந்த
இரண்டு இளைஞர்கள் அவரை கீழே தள்ளி விழுத்தி கொடூரமாக தாக்கினர்.

தாக்குதல்

இந்நிலையில் மூச்செடுக்க சிரமப்பட்ட முதியவரை யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவரது உடல்நிலை மோசமடைந்து இருப்பதால்
சிகிச்சை அளிப்பது சிரமம் எனக்கூறி திருப்பி அனுப்பினர்.

இந்நிலையில் குறித்த
முதியவர் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
சேர்ப்பிக்கப்பட்டார்.

தாக்குதலை மேற்கொண்ட இரண்டு இளைஞர்களும் தப்பி சென்ற நிலையில் அவர்களை கைது
செய்யும் நடவடிக்கையில் சுன்னாகம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version