Home இலங்கை அரசியல் யுத்தக்காலத்தில் கூட மதஸ்தலங்களில் புலிகள் கை வைக்கவில்லை: அமைச்சரை கண்டித்த சாணக்கியன் எம்.பி

யுத்தக்காலத்தில் கூட மதஸ்தலங்களில் புலிகள் கை வைக்கவில்லை: அமைச்சரை கண்டித்த சாணக்கியன் எம்.பி

0

திருகோணமலையில் வைக்கப்பட்ட சிலையை பாதுகாப்பு கருதிதான் அங்கிருந்து அகற்றியதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்ததை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “30 வருடம் யுத்தம் நடந்த காலப்பகுதியில் கூட எந்தவொரு பௌத்த மதத்துடன் தொடர்புடைய மதஸ்தளங்களும் விடுதலை புலிகளால் கூட அழிக்கப்படவில்லை.

ஆகையினால் எந்தவொரு தமிழ் மக்களும் இரவோரு இரவாக சென்று சிலைகளை அழிக்க போவதில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த சிலைக்கு எதிராகவும் அரசாங்கத்திற்கு எதிராகவும் அவர் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/bjKK_W2ZwsU

NO COMMENTS

Exit mobile version