திருகோணமலையில் புத்தர் சிலையை வைத்த சம்பவத்தில் முக்கிய பங்கு வகித்த துலார குணதிலக்க என்பவர் மீது குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது.
அதற்கமைய, சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் கீழ் அவர் கைது செய்யப்படலாம் என்று உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன முரண்பாட்டைத் தூண்டுதல் மற்றும் அந்த நேரத்தில் விகாரைக்கு சென்ற அரசாங்க அமைச்சர்களை துன்புறுத்த மக்களைத் தூண்டுதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
கடும்போக்குவாத செய்தி
அவர் பல முன்னாள் அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.
அத்துடன் கடும்போக்குவாத செய்திகளை வெளியிடும் சிங்கள இணையத்தளம் ஒன்றையும் அவர் இயக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
