ஒஸ்திரிய(austria) தலைநகர் வியன்னாவுக்குச் சென்ற இந்தியப்(india) பிரதமர் நரேந்திர மோடி(narendra modi), புத்தர் போரை அல்ல, அமைதியைக் கற்றுக் கொடுத்தார் என்று இந்திய சமூகத்தினரிடம் விளக்கினார்.
இந்த 21ஆம் நூற்றாண்டில் இந்தியா அமைதிக்கான செய்தியுடன் முன்னேறி வருவதாகவும், இந்தியா எப்போதும் அமைதிக்காக அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் இந்தியப் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.
உலகிற்கு அமைதியை கொண்டு வரும் இந்தியா
“நாங்கள் (இந்தியா) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது அறிவை உலகத்துடன் பகிர்ந்து வருகிறோம். புத்தரின் தத்துவத்தின்படி, இந்தியா எப்போதும் உலகிற்கு அமைதியைக் கொண்டுவருகிறது.
ஒஸ்திரியாவில் இந்திய சமூகத்தினரிடம் உரையாற்றும் போதே இந்திய பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஒஸ்திரியாவில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 31,000.ஆகும்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக வியன்னா சென்றடைந்தார்.
40 ஆண்டுகளுக்குப் பின்னர் வருகை தந்த மோடி
இந்தியப் பிரதமருக்கு ஒஸ்திரிய அதிபர் அலெக்சாண்டர் வான் டெர்லின் மற்றும் சான்சிலர் கார்ல் நியூஹாம்மர் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்திய-ஒஸ்திரியா இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் மோடி வெற்றி பெற்றார்.
40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் ஒஸ்திரியா வந்தார். முன்னதாக, இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி 1983 ஆம் ஆண்டு ஒஸ்திரியா வந்தார்.