Home இலங்கை அரசியல் பாதீட்டின் மீதான குழுநிலை விவாதம் : இன்று விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

பாதீட்டின் மீதான குழுநிலை விவாதம் : இன்று விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

0

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் தொடர்ச்சியாக இன்றும் (14) இடம்பெறுகின்றது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் (Ministry of Plantation and Community Infrastructure) செலவினத் தலைப்புக்களின் கீழ் இன்று குழு நிலை விவாதம் இடம்பெறவுள்ளது.

அதன்படி காலை 9.30க்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமான இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 6.30 வரை நடைபெறவுள்ளது.

காலை 09.30 முதல் 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.00 முதல் 06.00 வரை 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழு நிலை விவாதம் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் 135, 293 மற்றும் 337ஆகிய தலைப்புக்களின் கீழ் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மாலை 6.00 முதல் 6.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான எதிர்க்கட்சியின் பிரேரணைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 27ஆம் திகதி ஆரம்பமான குழுநிலை விவாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/yXS32E5GR_o

NO COMMENTS

Exit mobile version