Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் சந்தைக்குள் அமைக்கப்படும் கட்டடங்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

முல்லைத்தீவில் சந்தைக்குள் அமைக்கப்படும் கட்டடங்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

0

Courtesy: uky(ஊகி)

முல்லைத்தீவில் உள்ள சந்தைகளுக்குள் அமைக்கப்பட்டு வரும் கட்டங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

சந்தை எல்லைக்குள் அமையும் இக்கட்டிடங்கள் அமைக்கப்பட்டது முதல் பயன்பாடற்ற நிலையில் இருந்து வருகின்றன.

அவற்றை பயன்படுத்திக் கொள்ள நீண்ட நாட்களாக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுகின்றது.

பொதுச் சந்தை நிர்வாகத்திற்குள் உள்வாங்கப்பட்டிருக்கும் இச் சந்தை கட்டங்கள் கடைகளை நடத்தக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளன.

எனினும் இதுவரையில் அவ்வாறு வியாபார நிலையங்களை நடத்துவதற்காக அவை இன்னமும் திறக்கப்படாது பூட்டப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன.

முள்ளியவளை சந்தை 

முள்ளியவளை பொதுச் சந்தையின் எல்லைக்குள் கட்டப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகியும் இதுவரை அக்கட்டடங்கள் பயன்படுத்தப்படவில்லை.

வியாபாரத்தினை செய்யவதற்கு வசதியாக அமைக்கப்பட்ட அக்கட்டடங்களினுள் ஆடம்பர வசதிகள் செய்யப்பட்டுள்ளன என அது தொடர்பில் வினவிய போது கருத்திட்ட ஒருவர் குறிப்பிட்டார்.

தொடராக கடைகளை கொண்ட கட்டடமாக இது இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

முள்ளியவளையில் இயங்கிவரும் கரைத்துறைப்பற்று உபபிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தண்ணீரூற்று சந்தை

இதே உபபிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குள் அமையும் தண்ணீரூற்று சந்தைக்குள்ளும் கடைகளை கொண்ட கட்டடம் அண்மையில் அமைக்கப்பட்டது.

இதுவும் அதன் உள் கட்டுமானத்தில் உயர் வசதிகளை கொண்டதாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர் கடைகளாக அமைக்கப்படும் கட்டடம் முள்ளியவளைச் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள தொடர் கடைகளைக் கொண்ட கட்டடம் போல் பயன்பாடற்ற நிலையிலேயே தொடர்ந்தும் இருக்க விடப்படுமாக என்ற கேள்வியும் எழுப்படுகின்றது.

புதுக்குடியிருப்பு சந்தை

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குள் அமையும் புதுக்குடியிருப்பு பொதுச் சந்தைக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள தொடர் கடைகளைக் கொண்ட கட்டடங்களும் அமைக்கப்பட்டு நாட்கள் கடந்த போதும் இதுவரை பயன்பாட்டுக்கு வழங்கப்படவில்லை.

இது போலேவே ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் எல்லைக்குள் அமைக்கப்பட்ட தொடர் கடைகளைக் கொண்ட கட்டடங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட போதும் சிறப்பான பயன்பாட்டுச் செயற்பாடுகளை அவதானிக்க முடியவில்லை.

மேற்குறிப்பிட்ட கட்டடங்கள் பிரதேச செயலகங்களின் ஆளுகைக்குள் அவற்றுக்கு உருத்துடைய கட்டிடங்களாக உள்ளன என இது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கட்டடங்களை கட்டி முடித்ததோடு அவற்றை பொருத்தமான வாடகைக்கு வாடகையாளர்களுக்கு வழங்கி விடுவதால் பயன்படுத்தப்படுவதோடு வருமானமும் ஈட்டப்படும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

இவ்வாறு பயன்பாடற்று இருக்கும் கடைக் கட்டடங்களை பயன்பாட்டுக்கு விடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை விரைவில் தீர்த்து பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.

பயன்பாட்டுத் தேவை இல்லாத போது அவ்வாறான கட்டடங்களை அமைப்பதை தவிர்க்கலாம் என்பதும் அதற்கு செலவிடப்படும் நிதியினை மற்றொரு பயன்பாடுமிக்க செயற்றிட்டத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version