Home முக்கியச் செய்திகள் வீட்டின் கூரையின் மேல் பறந்த பேருந்து: இன்று காலை நடந்த துயரம்

வீட்டின் கூரையின் மேல் பறந்த பேருந்து: இன்று காலை நடந்த துயரம்

0

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று (14.06.2025) காலை 6.30 மணியளவில் ஹங்குரன்கெத்த பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

விபத்து தொடர்பில் லும் தெரிய வருகையில், மலுல்ல பகுதியில் உள்ள ஹங்குரன்கெத்த – அதிகரிகம வீதியில் லிசகோஸ் அருகே ஒரு வீட்டின் ஒரு பகுதியில் பேருந்து மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மேலும் விபத்தினால் காயமடைந்தவர்கள் பற்றிய விபரம் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் ஹங்குரன்கெத்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version