Home இலங்கை சமூகம் க்ளீன் ஸ்ரீலங்கா நடவடிக்கை: விதிமுறைகளை மீறிய பேருந்தில் இருந்து இறக்கப்பட்ட பயணிகள்

க்ளீன் ஸ்ரீலங்கா நடவடிக்கை: விதிமுறைகளை மீறிய பேருந்தில் இருந்து இறக்கப்பட்ட பயணிகள்

0

வீதி விதிமுறைகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்ட தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர், பயணிகளை இறக்கிவிட்டு, பேருந்தை மீண்டும் தமது இடத்துக்கே செலுத்தி சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது

இந்த சம்பவம் பாணந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீதி விதிமுறைகளை மீறியதாக கூறப்படும் குறித்த பேருந்தில், சாதாரண உடைகளில் பயணித்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள், போக்குவரத்து பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கியுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளால் சேதனை

இதனடிப்படையில் பேருந்து பொலிஸ் அதிகாரிகளால் சோதனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

பின்னர், பேருந்து ஓட்டுநர் மேற்கொண்டதாக கூறப்படும் விதிமுறை மீறல் தொடர்பில் அவருக்கு விளக்கமளிக்கப்பட்டு, அவருக்கான அபராத சீட்டும் கையளிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதனை ஏற்றுக்கொள்ளாத ஓட்டுநர், பொலிஸாரின் நடவடிக்கை நியாயமற்றது என்று கூறி, பயணிகளை பேருந்திலிருந்து இறங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

பின்னர் பயணிகள் இன்றி தமது பேருந்தை மீண்டும் தாம் புறப்பட்ட இடத்துக்கே ஓட்டிச்சென்றுள்ளார்.

இதேவேளை இந்த நடவடிக்கை, தூய்மையான இலங்கை திட்டத்தின்கீழ் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version