Home இலங்கை சமூகம் பேருந்து நடத்துநர்கள் தொடர்பில் முறைப்பாடு: விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பேருந்து நடத்துநர்கள் தொடர்பில் முறைப்பாடு: விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

0

பேருந்து நடத்துநர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (National Transport Commission) அறிவித்துள்ளது.

அதாவது, பேருந்தில் பயணிகளிடம் கட்டணம் அறவிட்ட பின்னர் அதற்கான பயணச்சீட்டையும் மிகுதிப் பணத்தையும் வழங்காத நடத்துநர்கள் மீது முறைப்பாடு செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு, குறித்த முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

முறைப்பாடு

எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டதன் பின்னர், பேருந்து பயண கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மிகுதிப் பணத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேருந்து நடத்துநர்களுக்கும், பயணிகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18

Source: https://ibctamil.com/article/bus-fare-issues-after-fuel-price-cut-complain-no-1728077296

NO COMMENTS

Exit mobile version