நாட்டில் டீசலின் விலை அதிகரித்தாலும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான் கட்டணம் அதிகரிக்கப்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்க தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் வான் கட்டணம் அதிகரித்தால், மாணவர்களின் எண்ணிக்கையும் குறையுமென்று சுட்டிக்காட்டியுள்ளார்.
தண்ணீர் கட்டணம்
அத்துடன் மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை செலுத்த முடியாத பெற்றோருக்கு மேலும் சுமையை ஏற்படுத்த முடியாதென்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் லங்கா ஓட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர (Lalith Dharmasekera) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
