Home இலங்கை குற்றம் அளுத்கமவில் வர்த்தகர் மனைவியுடன் கொலை

அளுத்கமவில் வர்த்தகர் மனைவியுடன் கொலை

0

வெலிபன்ன – அளுத்கம பகுதியில் வர்த்தகர் ஒருவரும் அவரது மனைவியும் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் அவர்களது வீட்டுக்குள் முகத்தை துணியால் கட்டப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, 75 வயதான வர்த்தகரும், 67 வயதான அவரது மனைவியும் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

விசாரணை 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்களது சடலங்கள் வீட்டிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வர்த்தகர் தம்பதியினருக்குப் பிள்ளைகள் இல்லை எனவும், இருவர் மாத்திரம் வீட்டில் தங்கியிருந்ததாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. 

 

Source: https://tamilwin.com/article/businessman-and-his-wife-killed-1728229483

NO COMMENTS

Exit mobile version