Home தொழில்நுட்பம் இலங்கையில் செயற்கை நுண்ணறிவு நடைமுறைபடுத்த அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கையில் செயற்கை நுண்ணறிவு நடைமுறைபடுத்த அமைச்சரவை அங்கீகாரம்

0

இலங்கையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான தேசிய மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

டிஜிட்டல் மாற்றப் பாதையில் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ள போதிலும், உலகளாவிய செயற்கை நுண்ணறிவில் இலங்கையால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய உத்திகள் தயாரிக்கப்பட்டு, செயற்கை நுண்ணறிவுக்கான ஒரு தளத்தை இலங்கையில் உருவாக்குவது 2030ஆம் ஆண்டளவில் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவில் ஒரு கணிசமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

பொருளாதார பின்னடைவு 

இதன்படி, மேற்படி நோக்கங்களை அடைவதற்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான தேசிய மூலோபாயத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு தொழில்நுட்ப அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும், இந்த முறைமை விவசாயம், சுகாதார சேவைகள், கல்வி மற்றும் பொது சேவைகளை மேம்படுத்துதல், நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைதல் மற்றும் வறுமையை ஒழித்தல் ஆகியவற்றை உள்ளடக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version