Home இலங்கை சமூகம் பயிர் சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு – கிடைத்தது அனுமதி

பயிர் சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு – கிடைத்தது அனுமதி

0

செவனகல சீனி தொழிற்சாலையின் கரும்புத் தோட்டங்கள் எரிந்தமையினால் பயிர் சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரச தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.  

லங்கா சீனி (தனியார்) நிறுவனத்திற்குச் சொந்தமான செவனகல சீனி தொழிற்சாலையின், கரும்புத் தோட்டங்களுக்கு 2025 ஒகஸ்ட் 16, 20, 21, 22, 24 மற்றும் 2025 செப்டம்பர் 04 மற்றும் 05 ஆகிய திகதிகளில் ஒரு குழுவினர் தீ வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மெற்றிக் டன்னுக்கு 7000 ரூபாய் வீதம் இழப்பீட்டை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version