Home இலங்கை சமூகம் தகாத முறைக்கு உட்படுத்தலை தடுக்கும் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்

தகாத முறைக்கு உட்படுத்தலை தடுக்கும் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்

0

Courtesy: Sivaa Mayuri

தகாத முறைக்கு உட்படுத்தலை தடுக்கும் சட்ட விதிகளை வலுப்படுத்தும் வகையில் தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்ய இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக, தகாத முறைக்கு உட்படுத்தல் உள்ளடங்களாக அனைத்து வகையான துன்புறுத்தல்களை குற்றமாக்கும் தண்டனைச் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்த 2022 டிசம்பர் 12ஆம் திகதியன்று அன்று அமைச்சரவை இணக்கம் வெளியிட்டது.

தயாரிக்கப்பட்ட வரைவு

இந்தநிலையில் சட்ட வரைவு ஆசிரியரால் தயாரிக்கப்பட்ட வரைவு சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டு அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக முன்வைக்க நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version