இலங்கை விமானப்படையின் நான்கு, எம்ஐ – 17 ஹெலிகொப்டர்களை அவசரமாக
பழுதுபார்ப்பதற்காக, பொஸ்னியா நிறுவனத்தின் கேள்விப்பத்திரத்துக்கு
அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபா பெறுமதிப்படி, இந்த ஹெலிகொப்டர்களை பழுதுபார்ப்பதற்காக, 5.4
பில்லியன் ரூபாய்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம்
ஒன்று கூறுகிறது.
உத்தியோகபூர்வ அறிவிப்பு
இந்த நிலையில் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு, அடுத்த அமைச்சரவை ஊடகச்
சந்திப்பில் வெளியிடப்படும் என்றும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
வெள்ளம் மற்றும் ஏனைய அவசர தேவைகளுக்காக இந்த ஹெலிகொப்டர்கள்
பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
