Home இலங்கை சமூகம் மோசமடையும் வானிலை! பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள விசேட சலுகை

மோசமடையும் வானிலை! பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள விசேட சலுகை

0

பேரிடர் சூழ்நிலை காரணமாக தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு இலவச அழைப்புகளையும், இலவச இணைய வசதிகளையும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் தகவல் தொடர்பு வசதிகளுக்காக நாளை (நவம்பர் 29) வரை பொதுமக்களுக்கு அனைத்து தொலைபேசி இணைப்புகளையும் செயலிழக்கச்செய்யாமல் தொடர்ந்து வழங்க தொலைப்பேசி சேவை நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

‘டிட்வா’ சூறாவளியால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலையை எதிர்கொண்டு மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவை

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பைப் பேணுவதற்கும் அத்தியாவசிய சேவைகளுக்கும் தேவையான வசதிகளை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அனைத்து தகவல் தொடர்பு சேவைகளையும் விரைவில் முழுமையாக மீட்டெடுக்க அரசாங்கமும் சேவை வழங்குநர்களும் இணைந்து செயல்பட்டு வருவதாக தொடர்புடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்ட இடங்களில் தகவல் தொடர்பு இணைப்புகளை மீட்டெடுப்பதற்கு எடுக்கக்கூடிய குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version