Home இலங்கை சமூகம் இலங்கையில் திரையரங்குகளுக்குள் தொலைபேசிகளுக்கு தடை விதிக்க வேண்டும் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டு

இலங்கையில் திரையரங்குகளுக்குள் தொலைபேசிகளுக்கு தடை விதிக்க வேண்டும் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டு

0

திரையரங்குகளுக்குள் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துசெல்வதை தடை செய்யுமாறு திரைப்பட இயக்குநரும் இலங்கை திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவருமான சோமரத்ன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சோமரத்ன திஸாநாயக்கவின் சிங்கபாகு திரைப்படத்தை திரையரங்கில் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து யூரியூப் அலைவரிசையில் ஒளிபரப்பியதாகக் கூறப்படும் கண்டியைச் சேர்ந்த ஒருவரை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.

இந்தநிலையில் இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தேவையற்ற சூழ்நிலை

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “தேவையற்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க எங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும் அத்தோடு திரையரங்குகளில் தொலைபேசிகளை தடை செய்வதுதான் நாம் செய்ய முடியும்.

ஆஸ்திரேலியா (Australia) போன்ற நாடுகளில் உள்ள திரையரங்குகளில் இத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளது அத்தோடு ஒரு திரைப்படத்தை ரசிக்க மக்கள் திரையரங்குகளுக்குச் செல்கிறார்கள்.

திரைப்படத்தின் உணர்ச்சி

ஒரு திரைப்படத்தின் உணர்ச்சிகரமான காட்சியை ரசிக்கும் போது ​​அவர்கள் தங்கள் உள்நாட்டுப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள் மற்றும் பிற பிரச்சனைகளை மறந்துவிடுவார்கள் ஆனால் தொலைபேசி ஒலிப்பதைக் கேட்கும் போதெல்லாம் உங்கள் மனநிலையை இழக்கிறீர்கள்.

தொலைபேசியில் யாரேனும் அரட்டை அடிப்பதைக் கேட்கும் போது நீங்கள் கவனம் சிதற விடுவீர்கள் ஆகையால் திரையரங்குகளுக்கு  தொலைபேசிகளை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version