இலங்கை தமிழரசுக் கட்சியை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோரி போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஐந்தாம் திகதி காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை அமைதி வழி போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அனைத்து தரப்பினருக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
போராட்டம் இடம்பெறவுள்ள இடம்
இந்த போராட்டம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா முற்றத்தில் இடம்பெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொது அமைப்புக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
