Home இலங்கை சமூகம் வடக்கில் உள்ள பல பொலிஸ் நிலையங்களுக்கு மர்மநபரால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வடக்கில் உள்ள பல பொலிஸ் நிலையங்களுக்கு மர்மநபரால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0

வடக்கில் சுமார் 10 பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

காங்கேசன்துறை பொலிஸ்  நிலையத்திற்கு இனந்தெரியாத நபர் தொலைபேசி அழைப்பொன்றை விடுத்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு

குறித்த தொலைபேசி அழைப்பு கடந்த 11 ஆம் திகதி மதியம் 1.15 மணி முதல் 1.20 மணி வரை வந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பொலிஸாார் விசாரணைகள் ஆரம்பித்து்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version