Home இலங்கை சமூகம் மணப்பெண் அலங்காரத்தில் சர்வதேச நாடுகளை தோற்கடித்த யாழ். பெண்

மணப்பெண் அலங்காரத்தில் சர்வதேச நாடுகளை தோற்கடித்த யாழ். பெண்

0

கம்போடியாவில் நடைபெற்ற மணப்பெண் அலங்கார போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் மூன்றாவது இடத்தினை பெற்று வெற்றிப்பெற்றுள்ளார்.

APHCA Cambodia Hair , Make up & Beauty Olympics 2024 போட்டிகள் வருடாவருடம் ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறுவது வழமை ஆகும். அந்த வகையில் இம்முறை கம்போடியாவில் இன்றைய தினம் குறித்த போட்டி நடைபெற்றுள்ளது.

இந்த போட்டியில் 19 நாடுகள் பங்குபற்றியிருந்த நிலையில், இலங்கையை சேர்ந்த 7 போட்டியாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

பலரும் பாராட்டு

இந்நிலையில், மணப்பெண் அலங்காரப் போட்டியில் இலங்கை – யாழ்ப்பாணம் –
தெல்லிப்பழையைச் சேர்ந்த அனித்தா விநயகாந்தன் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

இவருக்கு  பலரும் தமது வாழ்த்துக்களையும்,
பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version