Home இலங்கை அரசியல் நமக்காக நாம் பரப்புரை ஆவரங்கால் பகுதியில் முன்னெடுப்பு

நமக்காக நாம் பரப்புரை ஆவரங்கால் பகுதியில் முன்னெடுப்பு

0

தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு அதரவாக முன்னெடுக்கப்பட்டு வரும்
‘நமக்காக நாம்’ பரப்புரை நடவடிக்கை ஆவரங்கால் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானத  ஆவரங்கால் மத்தி சனசமூக நிலையத்தில் இன்று (08) மாலை 3.00
மணிக்கு இடம்பெற்றுள்ளது.

[P0BU4YC
]

மக்கள் சந்திப்பு

இதன்போது மேற்கொள்ளப்பட்ட மக்கள் சந்திப்பில், தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை
சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று தமிழ்ப் பொது வேட்பாளரின் சங்கு சின்னத்துக்கு
ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர்.

இப்பரப்புரை கூட்டத்தில் வடமாகாண முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி
சசிதரன் மற்றும் தமிழ் மக்கள் பொதுச்சபையினர் பங்கேற்று ஜனாதிபதித்தேர்தலில்
சங்கு சின்னத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை
எடுத்துரைத்திருந்தனர்.

இதில் அப்பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர்
கலந்துகொண்டிருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version