Home ஏனையவை வாழ்க்கைமுறை இதய நோய் உள்ளவர்கள் வேகமாக நடைபயிற்சி செய்யலாமா..!

இதய நோய் உள்ளவர்கள் வேகமாக நடைபயிற்சி செய்யலாமா..!

0

இதயத்திற்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்தாலும், சிலர் வேகமாக நடப்பதை விரும்பலாம். ஆனால், அதற்குச் சில முக்கியமான விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

வேகமாக நடக்கும் போது, இதயத்திற்கு அதிக அளவு ஒக்ஸிஜன் தேவைப்படும். ஆனால், அது அடைப்பு உள்ள இரத்தக் குழாய்கள் வழியே செல்கிறது என்பதால், அதிக களைப்பு, நெஞ்சு வலி, மூச்சு விடுவது போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும்.

இதுபோன்ற பிரச்சனைகள் தோன்றும் போது, உடனடியாக வேகத்தை குறைத்துவிட வேண்டும்.

ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும்

சிலர், இதயத்தில் அடைப்பு இருந்தாலும், “என்னால் வேகமாக நடக்க முடியும்” என முயற்சி செய்வார்கள். ஆனால், இதுவே இதயத்தின் பம்பிங் செயல்முறையை பாதித்து, ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும் வாய்ப்பு அதிகம்.

தாமதிக்காமல் இதயநல மருத்துவரை அணுகவேண்டும்

மேலும், இதயத்தில் பிரச்சனை இருக்கிறதா என சந்தேகம் இருந்தால், தாமதிக்காமல் இதயநல மருத்துவரை அணுகவும். அவர் டிரெட் மில் பரிசோதனை செய்ய பரிந்துரைக்கலாம்.

இதயத்தின் செயல்பாடுகளை அலசி பார்க்க இந்த பரிசோதனை பயனுள்ளதாக இருக்கும். எத்தனை நேரம், எவ்வளவு வேகத்தில் நடக்க முடிகிறது, வேகத்தில் பிரச்சனை வருகிறதா என்பதைக் கண்காணிக்கவும் உதவும்.

சிறப்பு மருத்துவர் ஆலோசனை பெற்ற பின்னரே இதய பிரச்சனை உள்ளவர்கள் வேகமாக நடப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

NO COMMENTS

Exit mobile version