கனடாவில் எதிர்வரும் ஈஸ்டர் பண்டிகையில் சொக்லேட் விலைகளில் உயர்வை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனுடன், கோகோ விலை தொடர்ந்து உயர்வாகவே உள்ளது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கோகோ பயிர்கள் வளர்த்த முக்கிய நாடுகளில் கடும் வானிலை காரணமாக கோகோ பயிர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
கோகோ விலை
இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே கோகோ விலை அதிகரித்து வருகின்றது.
2024 ஆம் ஆண்டு, சர்வதேச சந்தையில் கோகோ விலை டன் ஒன்றுக்கு 12,000 அமெரிக்க டொலரை கடந்தது, தற்போது விலை சுமார் 8,000 டொலர்களாக காணப்படுகின்றது.
கடந்த 2022 இல் 2,000 டொலர்களாக மட்டுமே இருந்ததை நினைவில் வைத்தால், இது பெரும் உயர்வாகவே பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சொக்லேட் தயாரிப்பாளர்களுக்கு விலையை உயர்த்துவது தவிர வழியில்லை என்றும், தரத்தை குறைக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சொக்லேட்டின் உற்பத்திச்செலவு மூன்று மடங்கு அதிகரித்திருக்கும் போது, பழைய விலையை வைத்தே விற்பது சாத்தியமே இல்லை எனவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
