Home உலகம் ஐந்து நாடுகளுக்கு பயணத் தடை விதித்த கனடா…!

ஐந்து நாடுகளுக்கு பயணத் தடை விதித்த கனடா…!

0

கனேடிய(Canada) அரசாங்கம் தனது நாட்டு பிரஜைகளை ஐந்து நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என பயண எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வன்முறை, குற்றங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை அதிகரித்து வருவதாலேயே இந்த பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கரீபியன் நாடுகளான கியூபா, டொமினிகன் குடியரசு, ஜமைக்கா, பஹாமாஸ் மற்றும் மெக்சிகோவிற்கும் பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

கனடா அரசின் அறிவுறுத்தல்

கியூபாவில் ஏற்பட்ட மின்சார தட்டுப்பாடு மற்றும் அடிப்படை தேவைகளின் குறைபாடுகள் காரணமாக கனடா அரசு பயணிகளுக்கு முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

டொமினிகன் குடியரசில் பல்வேறு குற்றங்கள், குறிப்பாக செல்வச்சின்னங்கள் அல்லது விலைமதிப்புள்ள பொருட்களை வெளிப்படையாக காட்சிப்படுத்துவதால் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகமாக உள்ளன.

குறிப்பாக சுற்றுலா பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு, வன்முறை குற்றங்கள் தீவிரமாக நடைபெறுகின்றன.

பயண திட்டங்கள் 

அதேவேளை ஜமைக்காவில் வன்முறை குற்றச்செயல்கள் அதிகமாக உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பஹாமாஸ் தீவுகளின் சில பகுதிகளில் கொள்ளை மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகமாக உள்ளன.

சுற்றுலா பயணிகள் இரவு நேரத்தில் தனியாக செல்லாமல், பாதுகாப்பான சுற்றுலா பகுதிகளில் மட்டுமே தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் கடத்தல்கள் மற்றும் வன்முறை அதிகமாக உள்ளதால் கனடா அரசு பயணிகளுக்கு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

முக்கிய சாலைகளில் ஆயுதக் குழுக்கள் வாகனங்களை நிறுத்தி தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த நாடுகளுக்கான பயண திட்டங்களை கவனமாக மதிப்பீடு செய்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை பின்பற்றுமாறும் கனடா அரசு சுற்றுலாப் பயணிகளுக்கு வலியுறுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version