கனடாவின் (Canada) பணவீக்க வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்தவகையில், வருடாந்த பணவீக்க விகிதம் ஜூலையில் 2.5 சதவீதமாக குறைந்துள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பணவீக்க வீதம்
கடந்த 2021ஆம் ஆண்டின் பின்னர் பதிவான மிகக் குறைந்தளவு பணவீக்க வீதம் கடந்த மாதம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் ஆண்டுப் பணவீக்க வீதம் கடந்த மாதம் 2.5 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வேலை நிறுத்த போராட்டம்
இதேவேளை, கனடா முழுவதிலும் உள்ள சரக்கு தொடருந்துகளை இயக்கும் 9,000 தொடருந்து ஊழியர்கள் இவ்வாறு வேலை நிறுத்தித்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
தொடருந்து ஊழியர்களின் இந்த தீர்மானம் கனேடிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என தொழில்துறையினர்களும் எச்சரித்துள்ளனர்.
எனினும், தங்களின் கோரிக்கைகள் கருத்தில் கொள்ளப்படா விட்டால் எந்த முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை என தொடருந்து ஊழியர்களின் யூனியன் குறிப்பிட்டுள்ளது.