Home உலகம் கனடாவில் புகலிடம் கோரும் வெளிநாட்டு மாணவர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவில் புகலிடம் கோரும் வெளிநாட்டு மாணவர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்

0

கனடாவில் (Canada) புகலிடம் கோரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, இந்தியா, நைஜீரியா, கினியா, கானா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளை சேர்ந்த மாணவர்கள் இதில் பெரும்பான்மையாக உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 5,500 வெளிநாட்டு மாணவர்கள் கனடாவில் புகலிடம் கோரியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சதவீதம் அதிகம் 

இது கடந்த ஆண்டு அதே காலப்பகுதியை விட 22 சதவீதம் அதிகம் என IRCC (Immigration, Refugees and Citizenship Canada) தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் மட்டும் 20,245 மாணவர்கள் புகலிடம் கோரியுள்ளனர்.

குடியிருப்பு வாய்ப்புகள்

இது 2023 ஆம் ஆண்டை விட இரட்டிப்பு மடங்கும், 2019 ஆம் ஆண்டை விட ஆறுமடங்கும் அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல மாணவர்கள் கனடாவுக்கு கல்வி நோக்கில் வந்தாலும், பொதுவாக குடியிருப்பு வாய்ப்புகள் குறைவதால் புகலிடம் ஒரு கடைசி வாய்ப்பாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version