Home இலங்கை அரசியல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்

0

Courtesy: Thavaseelan

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

குறித்த விஜயம் இன்றையதினம் (15.10.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனை சந்தித்து மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

விபரிக்கப்பட்ட விடயங்கள்

இக்கலந்துரையாடலின் போது, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள், பிரச்சினைகள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு அபிவிருத்தித் தேவைகள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரினால் கனேடிய உயர்ஸ்தானிகருக்கு விபரிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின் போது, முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் மற்றும் மாவட்ட தொழிற்துறை அமைப்புப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version