Home உலகம் உச்சக்கட்ட முறுகல்..! ட்ரம்ப்பிற்கு புதிய கனேடிய பிரதமர் கடுந்தொனியில் எச்சரிக்கை

உச்சக்கட்ட முறுகல்..! ட்ரம்ப்பிற்கு புதிய கனேடிய பிரதமர் கடுந்தொனியில் எச்சரிக்கை

0

கனடாவின் (Canada) புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லிபரல் கட்சியின் தலைமைப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் கனடாவின் முன்னாள் மத்திய வங்கித் தலைவர் மார்க் கார்னி (Mark Carney) வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், கனடா (Canada) மீது கூடுதல் வரிகளை விதித்தாலோ கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக மாற்ற அழுத்தம் தந்தாலோ அமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

ட்ரம்ப்பை நாங்கள் வெல்ல விட மாட்டோம்

இது தொடர்பாக மார்க் கார்னி கூறுகையில் ,

“கனடா ஒருபோதும், எந்த வகையிலும், வடிவத்திலும் அமெரிக்காவின் திமிருக்கு அடிபணியாது.

நாங்கள் ஒரு போதும் அமெரிக்காவின் மாகாணமாக இணைய மாட்டோம். அமெரிக்கர்கள் எங்களுக்கு மரியாதை காட்டும் வரை எனது அரசாங்கம் கட்டணங்களை குறைக்காது. ட்ரம்ப்பை நாங்கள் வெல்ல விட மாட்டோம்

இந்த மோதலில் நாங்கள் உறுதியாக இருப்போம். நாங்கள் உணர்ந்து கொண்ட பாடம் ஒன்றுதான். எங்களுக்கொரு அயல் நாடுள்ளது.

இத்தனை காலம் நாங்கள் நம்பிய அந்த அயல் நாட்டை இனியும் நம்ப முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து விதமான மின்சாரம், எரிபொருளையும் நிறுத்துவோம் என்று கனடா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/VPAc06Hw2g0

Source: https://ibctamil.com/article/canadian-prime-minister-has-warned-donald-trump-1741590224

NO COMMENTS

Exit mobile version