Home இலங்கை குற்றம் வவுனியாவில் மூன்று தனியார் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் இரத்து

வவுனியாவில் மூன்று தனியார் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் இரத்து

0

வவுனியாவிலிருந்து சேவையில் ஈடுபடும் மூன்று தனியார் பேருந்துகளின் வழித்தட
அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், அவை சேவையிலிருந்து
நீக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினர்
தெரிவித்துள்ளனர்.

இலங்கையரை தாக்கிய இங்கிலாந்து அதிகாரிக்கு விதிக்கப்பட்ட தண்டனை

வீதியில் போட்டித்தன்மை

மூன்றுக்கு மேற்பட்ட விபத்துக்களை ஏற்படுத்தியமை, வீதியில் போட்டித்தன்மையில்
பயணித்தமை போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ் பேருந்துகளின் வழித்தட
அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் இச் செயற்பாடு மக்கள் மத்தியின்
பாரிய வரவேற்பினை பெற்றுள்ளமையுடன் தொடர்ந்தும் பயணிகளின் சுதந்திரமான
பயணத்திற்கு இடையூறு விளைவிக்கும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கையினை
முன்னெடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைப்பு

தென் சீனக்கடலில் தொடரும் பதற்றம்: பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா பீரங்கி தாக்குதல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version