Home ஏனையவை வாழ்க்கைமுறை இலங்கையில் அதிகரித்துள்ள புற்றுநோய் கண்டறிதல்கள்: வெளியான காரணங்கள்

இலங்கையில் அதிகரித்துள்ள புற்றுநோய் கண்டறிதல்கள்: வெளியான காரணங்கள்

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையில், கடந்த ஆண்டு மாத்திரம் 33,000க்கும் மேற்பட்ட புதிய புற்றுநோயறிதல்கள் மற்றும் 19,000 எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளன.

இந்தநிலையில், புற்றுநோய் நோயாளிகளின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு குறித்து இலங்கையின் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரியின் 21வது வருடாந்த கல்வி அமர்வுகளில் உரையாற்றிய சுகாதார செயலாளர் பாலித மஹிபால இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அதிகரிப்பு வீதம் 

மேலும், ஆண்களுக்கு மத்தியில் வாய் புற்றுநோயானது மிகவும் பொதுவானதாக மாறியுள்ளதுட்ன் அதேவேளை, மார்பக புற்றுநோயானது பெண்கள் மத்தியில் பொதுவானதாக கண்டறியப்படுகிறது.

உள்நாட்டிலும் உலக அளவிலும் புற்றுநோயின் தாக்கம் பெருகிவருவதாக கூறிய அவர், 2050ஆம் ஆண்டில் உலகளவில் புற்றுநோய் பாதிப்புகள் 77 வீதம்  அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளார். 

இந்த எழுச்சியை சமாளிக்க, புகையிலை பயன்பாடு, மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் உடல் உழைப்பு இல்லாமை போன்ற ஆபத்தான காரணிகளைக் குறைப்பதில் கவனம் செலுத்துமாறு, இலங்கையர்களை மஹிபால ஹேரத் வலியுறுத்தியுள்ளார். 

வாழ்க்கைமுறை மாற்றங்கள் 

பெரும்பாலான புற்றுநோய்களை வாழ்க்கைமுறை மாற்றங்களால் தடுக்க முடியும் என்றும், ஒரு சிறிய பகுதி மட்டுமே மரபணு காரணிகளால் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2022ஆம் ஆண்டு முதல் உலகளாவிய புற்றுநோய் புள்ளிவிபரங்களின்படி, 20 மில்லியன் புதிய நோய்கள் மற்றும் 10 மில்லியன் இறப்புகளைக் காட்டுகின்றன.

இலங்கையில், மார்பக, வாய், நுரையீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள், என்பவை மிகவும் ஆபத்தான போக்குகளை கொண்டுள்ளன.

அதேவேளை, கடந்த ஆண்டில் மாத்திரம், இலங்கையில், 4,555 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதே சமயம் 1,990 ஆண்களுக்கு வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக, சுகாதார அமைச்சின் செயலாளர் மஹிபால ஹேரத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version