Home இலங்கை சமூகம் வடக்கில் புற்று நோயாளர்களுக்கு கிடைத்தது தீர்வு

வடக்கில் புற்று நோயாளர்களுக்கு கிடைத்தது தீர்வு

0

வட இலங்கையை வதிவிடமாகக் கொண்ட புற்றுநோயாளர்கள் கொழும்பில்(colombo) சிகிச்சை பெற்று
வருகையில் தமது நலிவுத் தன்மை காரணமாக அல்லது பிரயாணக் கஷ்டம் மற்றும்
பணவசதிக் குறைவு காரணமாக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சிகிச்சையைத்
தொடர்வதற்காக தமது விருப்பில் செல்லுகையில் அங்கு சிகிச்சை மறுக்கப்பட்டமை
தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

குறித்த விடயம் தொடர்பில் புற்றுநோயாளர்கள், மனித உரிமை ஆணைக்குழு மற்றும்
சுகாதார அமைச்சு, வெகுஜன ஊடகங்களூடாகவும் முறைப்பாடுகளைக் கொடுத்தும் கடந்த
ஒரு வருடமாக போராடினர்.

 புற்று நோயாளர்களின் நலன்கள் பூரணமாக பேணப்படும்

குறித்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சில் சுகாதார சேவைகள் பணிப்பாளர்
நாயகத்தின் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்று புற்று நோயாளர்களின் நலன்கள்
பூரணமாக பேணப்படும் முறையிலான முடிவுகள் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட
தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version