Home இலங்கை குற்றம் சட்டவிரோதமாக வாக்காளர் அட்டைகள் வைத்திருந்த வேட்பாளர் கைது!

சட்டவிரோதமாக வாக்காளர் அட்டைகள் வைத்திருந்த வேட்பாளர் கைது!

0

சட்டவிரோதமான முறையில் வாக்காளர் அட்டைகளை தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் புத்தளத்தில் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திலித் ஜயவீர தலைமையிலான சர்வஜன அதிகாரம் கட்சியின் சார்பில் புத்தளம் மாநகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கைது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக புத்தளம் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியால் விநியோகிக்கப்பட்ட 85 வாக்காளர் அட்டைகள் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் – ரத்மல்யாய பகுதியில் புத்தளம் உதவி தேர்தல் ஆணையாளர் மற்றும் பொலிசார் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வாக்காளர் அட்டைகள், தபால்காரரால் சந்தேகநபருக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன் சந்தேகநபரான தபால்காரர் தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version