Home இலங்கை சமூகம் விமானம் மூலம் போதைபொருள் இறக்குமதி : கோடீஸ்வர வர்த்தகர் கைது

விமானம் மூலம் போதைபொருள் இறக்குமதி : கோடீஸ்வர வர்த்தகர் கைது

0

போதைப்பொருளை விமானம் மூலம் இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டின்  பியுமி ஹன்சமாலியின் (Bhumi Hansamali) பெயரில் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டபிள்யூ சொகுசு கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆறு கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான குஷ் மற்றும் கொக்கெய்ன் போதைப்பொருளை விமானம் மூலம் இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரின் நாவல இரண்டு மாடி வீட்டின் கேரேஜில் குறித்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் விமானம் மூலம் ஐந்து கிலோ குஷ் போதைப்பொருள் மற்றும் 500 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளை இறக்குமதி செய்து, பெறுமாறு மற்றொரு நபரால் வழி நடத்தப்பட்ட சந்தேகத்திற்குரிய கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் காவல்துறையினரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

இந்தநிலையில், மருதானையில் பிரதான வாகன உதிரி பாகங்கள் இறக்குமதியின் உரிமையாளரான குறித்த சந்தேகநபர் தொடர்பில் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் புலனாய்வுப் பிரிவின் தளபதி பதும் குமார உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட நீண்ட விசாரணையின் விளைவாக இவர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த போது புலனாய்வுப் பிரிவின் உப காவல்துறை பரிசோதகர் சிறிவன்ச உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபர் நாவல கொஸ்வத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஒன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version