Home இலங்கை சமூகம் இன்று இரவு இடம்பெற்ற அனர்த்தம் : காரை பந்தாடியது தொடருந்து : பலர் படுகாயம்

இன்று இரவு இடம்பெற்ற அனர்த்தம் : காரை பந்தாடியது தொடருந்து : பலர் படுகாயம்

0

தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்று தொடருந்துடன் மோதியதில் சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்

இன்று (03) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காரில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் விபத்து

காலி சுதர்மாராம கோவிலுக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த நால்வரில் இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தொடருந்துடனேயே கார் மோதியுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version