Home இலங்கை சமூகம் மாலை நேர கடைகளில் திடீர் சோதனை : புற்றுநோயை உண்டாக்கும் சுவையூட்டிகள் கண்டெடுப்பு

மாலை நேர கடைகளில் திடீர் சோதனை : புற்றுநோயை உண்டாக்கும் சுவையூட்டிகள் கண்டெடுப்பு

0

சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள் மீது கடந்த சில தினங்களாக திடீர் சோதனை நடவடிக்கையை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பரின் தலைமையிலான சுகாதார குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்றைய (16) தினம் சாய்ந்தமருது பிரதேச இரவு நேர உணவகங்கள், கடைகள், கோழி பதப்படுத்தி விற்கும் இடங்கள் போன்றவற்றில் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சுகாதாரமற்ற உணவுகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து உணவுப் பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

புத்தாண்டு பாடல் ஒன்றை திரிபுபடுத்தி பாடிய இளைஞன் கைது!

சுகாதார முறைப்படி 

கடந்த காலங்களில் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய பல்பொருள் அங்காடிகள் போன்றவை சோதனையிடப்பட்டது.

இதன்போது உரிமையாளர்களுக்கும், உணவு தயாரிப்பவர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறும் உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீனம் காணப்படுதல், நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

ஐ.எம்.எப் இன் உதவியை இழக்க போகின்றதா இலங்கை! வெளியானது காரணம்

மேலதிக ஒழுங்குகள்

அதன்பொருட்டு நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனையில், மாலை நேர உணவகங்களில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள், கழிவு எண்ணெய்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள், கலப்படம் செய்யப்பட்ட சுவையூட்டிகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, முறையான களஞ்சிய வசதி இல்லாத மற்றும் பழுதடைந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

அதே போன்று சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க தேவையான மேலதிக ஒழுங்குகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வெளியான அறிவித்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.  

NO COMMENTS

Exit mobile version