Home இலங்கை சமூகம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் மீது நம்பிக்கை வெளியிட்டுள்ள கர்தினால்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் மீது நம்பிக்கை வெளியிட்டுள்ள கர்தினால்

0

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையை வெளிக்கொணர்வதன் மூலம் புதிய அரசாங்கம் நீதியை நிலைநாட்டும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் (Cardinal Malcolm Ranjith) தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அரசாங்கம் விளக்கமளிப்பு  

இதன்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் அவ்வப்போது தங்களுக்கு விளக்கமளிப்பதாக கர்தினால் கூறியுள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் மீது நம்பிக்கை வெளியிட்டுள்ள கர்தினால் | Cardinal Commends Govt Over Easter Sunday Probe

மேலும், இந்தப் படுகொலை குறித்து அரசாங்கம் வெளிப்படையான விசாரணையை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.
விசாரணைகளின் முன்னேற்றம் பற்றி அரசாங்கம், தம்முடன் நடத்திய உரையாடல்களில் இருந்து இது தெளிவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக கர்தினால் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version