மறைந்த தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை(Trincomalee) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனின்(R.Sampanthan) புகலுடலுக்கு கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ( Malcolm Ranjith) அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கொழும்பு – பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் இன்று(3) தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
புகலுடலுக்கு அஞ்சலி
இதேவேளை கொழும்பிலுள்ள பல அரசியல் தலைவர்களும் சம்பந்தனின் புகலுடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சம்பந்தனின் புகழுடலுக்கு எதிர்வரும் (07.07.2024) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு திருகோணமலை இந்துமயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.