Home இலங்கை சமூகம் மனித பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்த 13 உணவகங்களுக்கு எதிராக வழக்கு

மனித பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்த 13 உணவகங்களுக்கு எதிராக வழக்கு

0

மட்டக்களப்பு – கூளாவடி பிரதேசத்தில் உணவுப் பொருட்களை விற்பனை செய்து வரும் கடைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர். 

குறித்த சோதனை நடவடிக்கை நேற்று (11.03.2025) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

13 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்

இதன்போது சுகாதாரமற்ற
முறையில் உணவு தயாரித்த மற்றும் மனித பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்த 13 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக பொது சுகாதர
பரிசோதகர் தெரிவித்தார்.

மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய கோட்டமுனை மற்றும் இருதயபுரம் பொதுசுகாதார பரிசோதகர்கள் நேற்று இரவு கூளாவடி பிரதேசத்திலுள்ள, இரவில் இடியப்பம், புட்டு, தோசை போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை
முற்றுகையிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version