Home இலங்கை குற்றம் 1000 பேர் மரணம்! பொய் தகவல் கூறிய எம்.பிக்கு எதிராக வழக்கு- அநுரவின் கடும் எச்சரிக்கை

1000 பேர் மரணம்! பொய் தகவல் கூறிய எம்.பிக்கு எதிராக வழக்கு- அநுரவின் கடும் எச்சரிக்கை

0

நாடாளுமன்றத்தை தவிர்த்து வெளியில் போலியான பிரசாரம் முன்வைக்கப்பட்டிருந்தால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய(5) அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வழக்கு

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சீரற்ற காலநிலையால் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது, கம்பளையில் மாத்திரம் 1000 பேர் உயிரிழந்ததாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற வரப்பிரசாதங்களுக்குள் மறைந்து கொண்டு அவர் இதுபோல கதைகளைக் கூறிக்கொண்டிருக்கின்றார்.

இப்படி தவறான பிரசாரத்தை வெளியில் வைத்து தெரிவித்திருந்தார்.நிச்சயம் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும்.

ஏனென்றால் கம்களையில் அதிகமாக முஸ்லிம் மக்களே வாழ்கின்றனர். அவர்களுக்கு அரசாங்கம் மாற்றாந்தாய் மனப்பான்மையை காட்டுவதாக ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். அதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version