Home இலங்கை சமூகம் சட்டத்துக்கு பயந்து ஒழித்தோடும் விந்தன்…! கிண்டலடிக்கும் ரெலோ முக்கியஸ்தர்

சட்டத்துக்கு பயந்து ஒழித்தோடும் விந்தன்…! கிண்டலடிக்கும் ரெலோ முக்கியஸ்தர்

0

தேர்தல் காலத்தில் உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற அவதூறுகளை ஊடகங்கள் வாயிலாக
தன் மீது பரப்பியதாக தெரிவித்து விந்தன் கனகரத்தினத்தின் (Vinthan Kanagaratnam) மீது குருசாமி
சுரேந்திரனால் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வாறு தொடுக்கப்பட்ட வழக்கு இன்று நான்காவது தடவையாக எடுத்துக்
கொள்ளப்பட்டது.

நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுத்தும் நான்கு வழக்கிற்கும் விந்தன் கனகரத்தினம்
வருகை தரவில்லை தெரியவருகிறது.

 கடுமையான சட்ட சிக்கல்

இது குறித்து ரெலோவின் முக்கியஸ்தரும், வழக்கு தொடுனருமான குருசாமி
சுரேந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

நீதிமன்ற அவமதிப்பு காரணமாக கடுமையான சட்ட சிக்கல்களுக்கு முகம் கொடுக்க
வேண்டி வரும் என்பதால் அவர் நீதிமன்றிற்கு வரவில்லை போல தெரிகிறது.

மேலும் தான்தோன்றித்தனமாக வாய்க்கு வந்தபடி அவதூறுகளை பரப்பிய பொழுது,
ஊடகவியலாளர்கள் “நீதிமன்றத்தில் இந்த விடயங்கள் விசாரிக்கப்பட்டால் உங்கள்
நிலைப்பாடு என்ன” வென்று கேட்ட பொழுது நான் அதற்கு தயாராகவே உள்ளேன் என்று
விந்தன் கரகரத்தினம் வீராப்பு பேசியது அனைவரும் அறிந்ததே.

இருப்பினும் ஆதாரங்கள் இல்லாமல் பொய் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும்
பரப்பியதனாலே இப்பொழுது நீதிமன்றத்தை முகம் கொடுக்க முடியாமல் ஒளித்து திரிவது
தெரியவந்துள்ளது.

இது இவ்வாறு தொடருமாக இருந்தால் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டிற்கும்
சேர்த்து மேலதிகமான சட்டச் சிக்கல்களுக்கு அவர் முகம் கொடுக்க வேண்டிய
நிலைக்குள் அவர் தள்ளப்படுவார் என சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version